அரவக்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி, 4 பேர் காயம்
அரவக்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலியானது குறித்து...

லாரி மீது மோதியதில் அப்பளம் போல நொறுங்கிய காரின் முன் பகுதி. - DNS
கரூர்: அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சபரிமலையில் இருந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் லாரி மீது மோதியதில் காரில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் மூன்று பேர் பலியாகினர், 8 வயது சிறுமி உள்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள் மாணிக்கம்(40), கோவிந்தன்(60) மற்றும் பழனிவேல்(54) ஆகியோர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து இருந்தனர்.
இந்தநிலையில், கோயிலுக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன் காரில் புறப்பட்டு சென்றனர். பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் சொந்த ஊரான ராசிபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே அதிகாலை 2 மணியளவில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த மாணிக்கம், கோவிந்தன், பழனிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரில் பயணித்த 8 வயது சிறுமி உள்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்வு இடத்திற்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரையும் வேலாயும்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Ayyappa devotees killed, 4 injured after car rams into a lorry near Aravakurichi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


