பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி; 40 பேர் காயம்
ஷீதலா மாதா கோயில் அருகே இருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 14 பேர் பலியான விபத்து குறித்து...

விபத்து நிகழ்ந்த பகுதி. - படம் - ஏஎன்ஐ
ஷீதலா மாதா கோயில் அருகே இருந்த பக்தர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை (அக். 18) லாரி மோதியதில் 14 பேர் பலியாகினர்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் ஷீதலா மாதா கோயில் அருகே காத்துக் கொண்டிருந்த பல பக்தர்கள் மீது லாரி ஒன்று மோதியதில் 14 பேர் பலியானதாகவும் சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
ஷீதலா மாதா மந்திர் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கோயில் அருகே இருந்த பக்தர்கள் கூட்டத்தில் நுழைந்து, தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில், 14 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாரியில் ஏதேனும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டதா? விபத்துக்கான காரணம் என்ன? என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த அந்தச் சாலையில், காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு பக்தர்கள் மீது மோதியது குறிப்பிடத்தக்கது.
Summary
14 people were killed when a lorry rammed into devotees near the Sheetala Mata Temple on Sunday (Oct. 18).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

