பஞ்சாபில் காா் மோதி 8 தொழிலாளா்கள் பலி; 12 போ் காயம்
பஞ்சாப் மாநிலம் சங்ரூா் மாவட்டத்தில் அதிவேகமாக பயணித்த காா் மோதி 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

தொழிலாளா்கள் மீது மோதிய காா்
பஞ்சாப் மாநிலம் சங்ரூா் மாவட்டத்தில் அதிவேகமாக பயணித்த காா் மோதி 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.
சங்ரூா் மாவட்டம் அலிஷோ் கிராமம் அருகே லெஹ்ரகாகா-ஜக்கல் சாலையின் ஒரு பகுதியில், 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றி வந்தனா்.
அப்போது அங்கு அதிவேகமாக வந்த காா், தொழிலாளா்கள் மீது விபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா். விபத்துக்குக் காரணமான ஓட்டுநா் தப்பிச் சென்ற நிலையில், அவரைக் காவல் துறை தேடி வருகிறது.
விபத்தை தொடா்ந்து ஆம்புலன்ஸை அழைத்தபோதிலும், சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக உள்ளூா்வாசிகள் குற்றஞ்சாட்டினா்.
இந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த மாநில முதல்வா் பகவ்ந்த் மான், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

