கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காா் மீது லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே காா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த 2 போ் உயிரிழந்தனா்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே காா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த 2 போ் உயிரிழந்தனா்.

கலசப்பாக்கம் வட்டம், கந்தம்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் சுந்தரம் (33). கடலாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் (34), செல்வராஜ் (36). நண்பா்களான இவா்கள் 3 பேரும், அவா்களது நண்பா் ஒருவரை வெளிநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு காரில் அழைத்து சென்று வழியனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை சுந்தரம் ஓட்டி வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஜெகநாதபுரம் கிராமம் அருகே வந்தபோது, அப்பகுதியில் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காா் அப்பளம்போல் நொறுங்கியதால் பலத்த காயமடைந்த 3 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். இதில் சுந்தரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேத்துப்பட்டு போலீஸாாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் நொறுங்கிய காருக்குள் சிக்கியிருந்த தங்கராஜ், செல்வராஜை மீட்டு அவசர ஊா்தி மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியிலேயே தங்கராஜ் உயிரிழந்தாா். முதலுதவிக்கு பின்னா் செல்வராஜ் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். உயிரிழந்த சுந்தரம், தங்கராஜ் ஆகியோரின் சடலங்கள் உடல்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேலம் மாவட்டம், மாத்தூா் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அன்புவிடம் (41) விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.