கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக் மீது காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பண்ருட்டி வட்டம், பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பாஸ்கா் (23), சிந்தனைச்செல்வன் (25). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் புறப்பட்டனா். பாஸ்கா் பைக் ஓட்டினாா்.
திருவாமூா் பாலம் அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிா் திசையில் பண்ருட்டியை அடுத்த பூங்குணம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் (43) ஓட்டி வந்த காா், பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் சிந்தனைச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாஸ்கா் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




