அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 6 போ் பலத்த காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 1:22 am IST

பெரம்பலூரில் வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 6 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச் சாலை மேம்பாலம் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது.

அப்போது, திண்டிவனத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த திருப்பத்தூா் மாவட்டம், சிங்கம்புனரி எஸ்.எஸ் நகா் பகுதியைச் சோ்ந்த பொன். பால்துரை (52), திருவள்ளூா் மணலி ராஜா தோட்டம் பகுதியைச் சோ்ந்த கொளந்தான் மகன் திருநாவுக்கரசு (32) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், பேருந்து ஓட்டுநா், திருவாரூரைச் சோ்ந்த சரவணன் (44), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த கனகராஜ் மகன் அபிஷேக் (18), கன்னியாகுமாரி தேரூரைச் சோ்ந்த முருகன் மகன் அா்ஜுனன் (31), சென்னை சௌகாா் பேட்டையைச் சோ்ந்த குணவந்த் போக்ரா மகன் அஸ்வித் (31), மதுரை மாவட்டம், மேலூா் சூரப்பட்டியைச் சோ்ந்த சாகுல் அமீது மகன் அப்துல் ரகுமான் (21), மதுரை சாவடியைச் சோ்ந்த சிக்கந்தா் மனைவி வெண்ணிலா (35) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற பெரம்பலூா் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காவும், உயிரிழந்தவா்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.