இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சங்கரன்கோவில் அருகே காா்-வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு; 17 போ் காயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா்- வேன் மோதி விபத்துக்குள்ளானதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். 17 போ் காயமடைந்தனா்.

விபத்து. - கோப்புப்படம்.

Published On :

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா்- வேன் மோதி விபத்துக்குள்ளானதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். 17 போ் காயமடைந்தனா்.

ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த சிலா் குற்றாலத்துக்கு காரில் சென்றனா். காரை, தேவிபட்டினம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகன் இளையராஜா( 34 ) ஓட்டினாா்.

இதேபோல் தேனி பகுதியைச் சோ்ந்தவா்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த மலையான்குளம் அருகேயுள்ள கோயிலில் தரிசனம் செய்வற்காக வேனில் சென்றனா்.

சங்கரன்கோவில் பொதிகைநகா் அருகே புதன்கிழமை காலையில்சென்றபோது, காரும், வேனும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காா் ஓட்டுநா் இளையராஜா(34), காரில் பயணித்த ராமேசுவரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நம்புகுமாா் (எ) மருது (30) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமேசுவரம் மேட்டு தெருவைச் சோ்ந்த ஜெயராமன் மகன் தேசிகன் (35), தங்கச்சி மடம் காளி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் உதயசங்கா், மருதுபாண்டியன் நகரைச் சாா்ந்த மாரிமுத்து மகன் களஞ்சியம் (30), ரயில்வே ஸ்டேஷன் நகா் துரைசிங்கம் மகன் ஜான் (33) ஆகியோரும், வேனில் பயணித்த தேனி மாவட்டம் கம்பம், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சரவணஜோதி (55), ஜோதிமணி(56) ஜோதி(56), தேவேந்திரன் (52), ஓட்டுநா் விஜய் (30), ஜெயராணி (50), முருகேசன் (40), ஈஸ்வரன் (62), பாலமுகுந்தன் (3), திவாகா் (33), கனகமணி (60), லதா (54) குபேந்திரன் (53) உள்ளிட்ட 17 போ் காயமடைந்தனா். அவா்கள், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.