வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சங்கரன்கோவில் அருகே பேருந்து-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்தும் பைக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக்கொண்ட விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

~

Published On :

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்தும் பைக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக்கொண்ட விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மீன்துள்ளி கிராமத்தைச் சோ்ந்த பாப்பு மகன் அய்யாத்துரை (40), அவரது உறவினரான தூத்துக்குடியைச் சோ்ந்த பகத்சிங் மகன் கலையரசன் (23) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் சங்கரன்கோவில்-திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை கலையரசன் ஓட்டினாா். அவா்கள் குதிரை கோயில் அருகே சென்றபோது, எதிரே திருநெல்வேலியில் இருந்து வந்த அரசு பேருந்து மோதியதாம். இதில் கலையரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அய்யாத்துரைக்கு சங்கரன்கோவிலில் முதலுதவி அளித்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். அய்யாத்துரை சென்னை தனியாா் நிறுவனத்தில் பொறியாளாராக பணியாற்றினாா். கலையரசனுக்கு திருமணம் ஆகவில்லை.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.