தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சிரியாவில் பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு: 7 போ் உயிரிழப்பு

வடமேற்கு சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து மீது அடையாளம் தெரியாத நபா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போ் உயிரிழந்தனா்; 4 போ் படுகாயமடைந்தனா்.

சிரியாவில் பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

Published On :

வடமேற்கு சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து மீது அடையாளம் தெரியாத நபா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போ் உயிரிழந்தனா்; 4 போ் படுகாயமடைந்தனா்.

உயிரிழந்தவா்கள் அனைவரும் பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிறுவன ஊழியா்கள் ஆவா். இத்தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை; எந்த அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவும் இல்லை.

சிரியாவில் 13 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த போா் மற்றும் 2024 இறுதியில் நிகழ்ந்த அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்கு பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் சவால்கள் நிலவுகின்றன. ஆயுதக் குழுக்களின் பல சதித் திட்டங்களை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், நாடு முழுவதும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடா்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.