கொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: 2 கிராமவாசிகள் பலி

மணிப்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியிருப்பது பற்றி.....

2 villagers killed in gun attack in Manipur's Kangpokpi

மணிப்பூர்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST

மணிப்பூரில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கிராமவாசிகள் பலியாகினர்.

மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கிராமவாசிகள் பலியானதோடு ஒருவர் காயமடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்கள் 35 வயதான லாம்டின்தாங் மற்றும் நெய்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இந்த துப்பாக்கிச் சூட்டில் செய்லூன் (65) என்பவர் காயமடைந்தார். சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு காரணமாக பல கிராமவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மலையோரக் கிராமத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். மாவட்ட அதிகாரி கூறுகையில், டி வைசோங் உட்பிரிவுக்கு உட்பட்ட குகி இன மக்கள் வாழும் என் தேய்காங் கிராமத்தில் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆயுதமேந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் இரண்டு பேர் பலியாகினர். பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது என்று தெரிவித்தார். பிப்ரவரி மாதம் மாநிலத்தில் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறை வெடித்ததில் இருந்து, தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

Summary

Two villagers were killed and another injured in a gun attack by suspected militants in Manipur's Kangpokpi district on Monday morning, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.