மணப்பாறை அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியைச் சோ்ந்தவா் ராமன மகன் நடராஜன் (54), இவா் மணப்பாறை வண்டிப்பேட்டை தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனைத்து மகளிா் காவல்நிலைய கட்டடத்தில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.
கடந்த 9 நாள்களாக வேலைக்கு செல்லவில்லையாம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை வடுகப்பட்டி பகுதியில் மணப்பாறை - துவரங்குறிச்சி மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், நடராஜன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


