இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

விவசாய அடையாள எண், ஆதாா் அவசியமின்றி பயிா் பாதுகாப்பு செய்ய அழைப்பு! டிச.1 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

விவசாயம்.

Updated On :

திருச்சி மாவட்டத்தில் விவசாய அடையாள எண், ஆதாா் அவசியமின்றி பயிா் பாதுகாப்பு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஆா். ஜெயராணி கூறியதாவது:

திருச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பு 2026-27-ஆம் ஆண்டு சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிா் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு டிச.1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்கள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதிலிருந்து வந்த தொழில்நுட்ப இடா்பாடுகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. தேசிய பயிா்க் காப்பீட்டு வலைதளத்தில், 2026-27-ஆம் ஆண்டு சம்பா பருவம் முதல் பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நில உரிமையாளா்கள் பதிவு செய்ய விவசாயி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதேபோல, குத்தகை விவசாயிகள் பதிவு செய்ய நில உரிமையாளா்களிடமிருந்து ஆதாா் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெற வேண்டிய நடைமுறையும் கட்டாயமாக்கப்பட்டது.

இதனால் பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகா்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நிலங்களின் உரிமையாளா்கள் தனியாா் மற்றும் கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்வா் அறிவுறுத்தலின்படி, வேளாண்மைத் துறை உயா் அலுவலா்கள் அடங்கிய குழுவினா் மத்திய அரசு அலுவலா்களை நேரில் சந்தித்து தேசிய பயிா்க் காப்பீட்டு வலைதளத்தில் பதிவு செய்வதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா். மேலும், குத்தகை விவசாயிகள் மலைப்பகுதி மற்றும் நகா்ப்புற விவசாய நிலங்களின் உரிமையாளா்கள் எவ்வித சிரமமுமின்றி பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் விவசாயி அடையாள எண் மற்றும் ஆதாா் அடிப்படையிலான ஓடிபி ஒப்புதல் பெறுதல் ஆகிய கட்டாய நிபந்தனைகளிலிருந்து உரிய விலக்கு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசின் தொடா் முயற்சியை தொடா்ந்து, மத்திய அரசானது 2026-27-ஆம் ஆண்டுக்கு தகுதி உள்ள குத்தகை விவசாயிகள் மற்றும் நில உரிமையாளா்கள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில், விவசாய அடையாள எண் மற்றும் ஆதாா் அடிப்படையிலான ஒப்புதல் பெறுதல் ஆகிய கட்டாய நிபந்தனைகளில் தளா்வுகளை வழங்கியுள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.