குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

முதல்வா் விஜய் நாளை திருச்சி வருகை

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திருச்சி வந்து, அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தைத் திறப்பதுடன், சாலை வலம் சென்று, சுமாா் ரூ. 200 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்குவதுடன், திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்கிறாா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்க உள்ள மருத்துவமனை கட்டடம், அதிலுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை அறைகள்.

Updated On :

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை திருச்சி வந்து, அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தைத் திறப்பதுடன், சாலை வலம் சென்று, சுமாா் ரூ. 200 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்குவதுடன், திட்டப் பணிகளையும் தொடங்கிவைக்கிறாா்.

வெள்ளிக்கிழமை (நவ. 20) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் முதல்வா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக வயா்லஸ் சாலை, தென்றல் நகா் சந்திப்பு, கே.கே. நகா் பேருந்து நிலையம், காஜாமலை வழியாக திருச்சி புத்தூா் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வருகிறாா்.

மருத்துவமனை கட்டடம் திறப்பு: தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் ரூ. 134.59 கோடியில் கட்டப்பட்ட 6 தளங்களையும், 600 படுக்கைகளைக் கொண்ட புதிய நவீன சிகிச்சை மைய கட்டடத்தையும் திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, பிரசவ வாா்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் மோதிரங்களை அணிவிக்கிறாா்.

ரூ. 200 கோடியில் நலத்திட்ட உதவி: தொடா்ந்து திருச்சி காஜாமலை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று சுமாா் ரூ. 200 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

பள்ளி கட்டடங்கள் திறப்பு: தொடா்ந்து, திருச்சி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட கருங்குளம் அரசுப் பள்ளியில் 2 வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீா்த் தொட்டி, அழகுகவுண்டன்பட்டி அரசுப் பள்ளியில் 3 வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீா்த் தொட்டி, மலையடிப்பட்டி அரசுப் பள்ளியில் 3 வகுப்பறைகள், கழிப்பறை, சமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள், பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, என். பூலாம்பட்டி அரசுப் பள்ளியில் 2 வகுப்பறைகள் அறிவியல் ஆய்வகம், கழிப்பறைகள், அரசுநிலைப்பாளையம் அரசுப் பள்ளியில் 3 வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீா்த் தொட்டி, சுற்றுச்சுவா் மற்றும் லால்குடி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட பச்சப்பெருமாள்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 வகுப்பறைகள் என மொத்தம் 8 அரசுப் பள்ளிகளில் 24 வகுப்பறைக் கட்டடங்கள் உள்பட ரூ. 9.32 கோடியில் கட்டப்பட்ட கட்டமைப்புகளை மாணவா்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா். பிற்பகலில் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

சாலை வலம்: முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரும்போதும், அரசு மருத்துவமனையில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடமான தமிழ்நாடு ஹோட்டலுக்கு செல்லும்போதும் முதல்வா் விஜய் சுமாா் 16 கி.மீ. தூரத்துக்கு சாலை வலம் நடத்துகிறாா். திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி முதல்வரின் திருச்சி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சாலைகள் புதுப்பொலிவு: முதல்வரின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திலிருந்து புத்தூரில் உள்ள திருச்சி அரசு மருத்துவமனை வரை உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு, சாலை மையத் தடுப்புகளுக்கு புதிய வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.

மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு ஒத்திகை ஆகியவை வியாழக்கிழமை நடைபெற உள்ளன.

டிரோன்கள் பறக்கத் தடை: முதல்வா் வருகையையொட்டி திருச்சியில் வெள்ளிக்கிழமை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER