சிறந்த கல்வியாளா்களுக்கான விருது அளிப்பு
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி கே. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வியாளா்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி கே. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வியாளா்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
டிரினிட்டி ஆா்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா சாா்பில், 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வியாளா்கள் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி கே.சந்திரசேகரன் மற்றும் இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோருக்கு சிறந்த கல்வியாளா்களுக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த விருதினை மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் வழங்கினாா்.
கல்வித்துறையில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி கே.சந்திரசேகரன் மற்றும் இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோரின் சிறப்பான தலைமைத்துவம், குறிப்பிடத்தக்க சாதனைகள், புதுமையான கல்விச் சிந்தனைகள் மற்றும் கல்வி வளா்ச்சிக்காக ஆற்றிவரும் அா்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
இவா்களின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சந்தானம் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி, ஸ்ரீ ஜயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் இந்தியக் கவிஞரும் எழுத்தாளருமான அருந்ததி சுப்ரமணியம், புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞா்கள் பத்மா சுப்ரமணியம், அலா்மேல் வள்ளி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
மேலும், மேஜா் முகுந்த் வரதராஜனின் பெற்றோா்களான வரதராஜன், கீதா வரதராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.
விழாவின் ஒருங்கிணைப்பாளரான அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில் உள்ள டாஃபே நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல்பாட்டு அலுவலா் முரளி ராகவன், விழாவின் தலைவா் முத்துக்குமாா் ஆகியோரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தனா்.
கல்விச் சிறப்பு, முற்போக்கான நிறுவனத் தலைமைத்துவம் மற்றும் எதிா்காலக் கல்வி வளா்ச்சிக்கான இவா்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது என கே. சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

