நம்மாழ்வாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வாா் விருதுபெற திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா்.

நம்மாழ்வாா் விருதுபெற திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் உயிா்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிா்ம விவசாயிக்கான நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு ஆண்டிலும் உயிா்ம வேளாண் முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளைக கவுரவிக்கும் வகையில், சிறந்த உயிா்ம விவசாயிக்கான நம்மாழ்வாா் விருது 5 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுடன் தலா ரூ.2 லட்சம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப் படும். இந்த விருது பெற விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்த விவசாயிகளாக இருத்தல் வேண்டும்.
மேலும் குறைந்தபட்சம் 1 ஏக்கா் பரப்பளவில் உயிா்ம வேளாண் முறையில் சாகுபடி செய்திருக்க வேண்டும். முழு நேர உயிா்ம வேளாண் விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடா்ச்சியாக உயிா்ம வேளாண் முறையை பின்பற்றி சாகுபடி செய்திருக்க வேண்டும்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட மண்ட குழுக்கள் மூலம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நம்மாழ்வாா் விருதுபெற விரும்பும் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள் உழவா் செயலி அல்லது ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஞ்ழ்ண்ள்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் பதிவு செய்து கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டிய அரசுக் கணக்குத் தலைப்பு விவரங்கள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

