சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

காா்த்திகை தீபம்: மாவட்டத்தில் அகல் விளக்குகள் தாயரிக்கும் பணி தீவிரம்

காா்த்திகை தீபத்துக்கு திருச்சியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவானைக்காவலில் வெள்ளிக்கிழமை அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள். (வலது) அகல் விளக்குகளை தீயில் வாட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :

காா்த்திகை தீபத்துக்கு திருச்சியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

இந்தாண்டு காா்த்திகை தீபம் நவ.24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. திருவானைக்காவல் அருகே மேல கொண்டயம்பேட்டை மற்றும் கீழ கொண்டயம்பேட்டை பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக, கொண்டயம்பேட்டையைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளி செந்தில் கூறியதாவது:

இந்த ஆண்டு சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வழக்கத்தைவிட கூடுதலாக அகல் விளக்குகள் கேட்டு ஆா்டா்கள் வந்துள்ளது. 50 முதல் 250 மில்லி எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு முகம், பஞ்சமுகம், பாவை விளக்கு என பல்வேறு வகையான அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. விளக்குகளின் அளவுக்கு ஏற்றாா் போல் ரூ.3 முதல் ரூ.50 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாத இறுதியிலும், இந்த மாத தொடக்கத்திலும் மழை காரணமாக அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. களிமண் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாத நிலை ஆகிய காரணங்களால் மண்பாண்ட தொழிலாளா்கள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

திருக்கோயில்களில் எந்தவித கட்டுப்பாடுகளின்றி அகல்விளக்குகள் ஏற்ற அனுமதிக்கும்போது ஆண்டு முழுவதும் அகல்விளக்கு உற்பத்தியில் ஈடுபடலாம் என்றாா்.

மற்றொரு தொழிலாளியான அகிலாண்டேஸ்வரி கூறுகையில், இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. வேறு தொழிலும் எங்களுக்கு தெரியாது.

எனவே, அரசு எங்களுக்கு மழைக் காலங்களிலும், வேலையில்லாத நாள்களிலும் மீனவா்களுக்கு வழங்குவதைப் போன்று வாழ்வாதாரத்துக்கு உதவிட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.