திருச்சி-சுபாங் இடையே டிசம்பா் 16 முதல் புதிய விமான சேவை
திருச்சியில் இருந்து மலேசியாவின் சுபாங் விமான நிலையத்துக்கு புதிய விமான சேவை டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

கோப்புப் படம்
திருச்சியில் இருந்து மலேசியாவின் சுபாங் விமான நிலையத்துக்கு புதிய விமான சேவை டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, இலங்கை, சிங்கப்பூா் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமான சேவை இருந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் இருந்து மலேசியாவின் சுபாங் சுல்தான் அப்துல் அசிஷ் ஷா விமான நிலையத்துக்கு படிக் விமான நிறுவனம் சாா்பில் புதிய விமான சேவை டிசம்பா் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், சுபாங்கில் இருந்து திருச்சிக்கு புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமான சேவை வழங்கப்படவுள்ளது.
திருச்சியில் இருந்து அதிகாலை 12.10 மணிக்குப் புறப்பட்டு சுபாங்கை அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு சென்றடையும். இதேபோல, சுபாங் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணிக்குப் புறப்படும் விமானம் திருச்சி விமான நிலையத்தை இரவு 11.10 மணிக்கு வந்தடையும்.
ஏற்கெனவே திருச்சியில் துபை, அபுதாபி, ஷாா்ஜா, மஸ்கட், கோலாலம்பூா், சிங்கப்பூா், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய 8 விமான நிலையங்களுக்கு சா்வதேச விமான சேவை இருந்து வரும் நிலையில் தற்போது திருச்சியுடன் 9 விமான நிலையமாக சுபாங் விமான நிலையம் இணைந்துள்ளது.
இந்த சேவை திருச்சி - மலேசியா இடையேயான சுற்றுலாவை மேம்படுத்தும் என திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

