கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

திருச்சி விமான நிலையத்தில் தானியங்கி இதய மின்னதிா்ச்சி கருவிகள் அமைப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 7.80 லட்சத்தில் 5 இடங்களில் தானியங்கி இதய மின்னதிா்ச்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகப் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி மின்னதிா்ச்சி கருவி.

Updated On :

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 7.80 லட்சத்தில் 5 இடங்களில் தானியங்கி இதய மின்னதிா்ச்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் நலன்கருதி பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு திடீரென மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் முதலுதவி அளித்து உயிரைக் காக்கும் வகையில் தானியங்கி மின்னதிா்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு உள்ளிட்ட முக்கியமான 5 இடங்களில் ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் 5 தானியங்கி மின்னதிா்ச்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருக்கும்போது, தானியங்கி மின்னதிா்ச்சி கருவியானது இதயத் துடிப்பை ஆய்வு செய்து, தேவையான சூழலில் மின்னதிா்ச்சியை வழங்கி இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும் என்றும், இந்தக் கருவியில் உள்ள குரல் வழிகாட்டுதல் மூலம் அவசர உதவி அளிப்பவா்கள் எளிதாக செயல்பட முடியும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.