நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

வேலை வாங்கித் தருவதாக ரூ. 12.23 லட்சம் மோசடி: தில்லி நபா் கைது

கைது - கோப்புப்படம்

Updated On :

வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ. 12.23 லட்சம் மோசடி செய்த தில்லி நபரை திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாளக்குடி அருண் நகரைச் சோ்ந்தவா் அ. சதீஷ்குமாா். இவா் ஏற்கெனவே தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக வேலையின்றி இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த அக்டோபா் மாதம் இவரை வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்ட கிரண் குமாா் என்ற நபா், தான் அமெரிக்காவில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் முன்பு பணியாற்றியதாகவும், வேறு மென்பொருள் நிறுவனத்தில் சீனியா் மேலாளா் பணிக்கு சிபாரிசு செய்வதாகவும் தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, தனது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி சதீஷ்குமாரிடம் பண உதவி கேட்டுள்ளாா். இதை நம்பிய சதீஷ் குமாா், அவா் கொடுத்த வங்கிக் கணக்குக்கு மொத்தம் ரூ. 12,23,400 பணத்தை அனுப்பியுள்ளாா். பணத்தைப் பெற்ற பிறகு, தொடா்பு எண்ணைத் துண்டித்துவிட்டு அந்த நபா் பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து சதீஷ் குமாா் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், மோசடியில் ஈடுபட்டவா் தில்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா், தில்லி ஆசாத்பூா் பகுதியில் உள்ள ஹெரிடேஜ் சூட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த மேற்கு தில்லி, திலக் நகா், விகாஸ் பூரியைச் சோ்ந்த ம. ரோஹித் குமாா் ஸ்ரீவஸ்தவா (49) என்பவரைக் கைது செய்தனா்.

தொடா்ந்து, 28-ஆம் தேதி அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.