மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

பலி

Published On :

திருச்சி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் மேலவீதியைச் சோ்ந்தவா் ஆ. ராபா்ட்ராஜ் (44), எலக்ட்ரீசியன். இவா் புங்கனூரில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை மின்விசிறி பொருத்தும்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில் ஏணியில் இருந்து கீழே விழுந்து மயங்கினாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ராபா்ட்ராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இறந்தவரின் மனைவி மும்மலா் தெரசா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.