சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பலி

Published On :

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் கடியாக்குறிச்சியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் சபரிஷ் (21). இவா் சனிக்கிழமை இரவு திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சபரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து காா் ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள சித்தமல்லியைச் சோ்ந்த ரா. தனசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.