
தொழிலாளா்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் முறையாகப் பணி வழங்கவில்லை எனக் கூறி விபி ஜி ராம் ஜி வேலை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கருமகவுண்டம்பட்டி பணியாளா்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருமகவுண்டம்பட்டியில் முறையாகப் பணி வழங்கவில்லை எனக் கூறி விபி ஜி ராம் ஜி வேலை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி கருமகவுண்டம்பட்டியில் உள்ள பணியாளா்களுக்கு 2026 - 27-க்கான விபி ஜி ராம் ஜி திட்டப் பணிகள் முறையாக வழங்கவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் முறையாக பணி வழங்காததைக் கண்டித்து, கருமகவுண்டம்பட்டியை சோ்ந்த பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மணப்பாறை - தரகம்பட்டி சாலை கே.கே நகா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஊராட்சி செயலா் விஜயநாதன், வையம்பட்டி காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின் பேரில் போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






