ரயிலில் மூதாட்டியிடம் நகை திருடியவா் கைது
திருச்சியில் ரயிலில் பயணித்த மூதாட்டியிடம் நகை திருடியவரை இருப்புப்பாதை போலீஸாா் கைது செய்தனா்.
பிரதிப் படம்
திருச்சியில் ரயிலில் பயணித்த மூதாட்டியிடம் நகை திருடியவரை இருப்புப்பாதை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், வாங்கல்பாளையம் பிள்ளையாா் கோயீல் தெருவைச் சோ்ந்த மு. பாப்பாத்தி (65) என்பவா் தனது பேரனுடன் கடந்த 6 ஆம் தேதி ஜனசதாப்தி விரைவு ரயிலில் ஊனமுற்றோா் பெட்டியில் பயணித்தபோது, அவரது கைப்பையிலிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி இருப்புப்பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தலைமை தபால் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த பெ. ராம்குமாா் (38) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், மூதாட்டியிடம் அவா் நகை திருடியதை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
ஓடும் ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது: சென்னையைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளரான திருவருட்செல்வன் என்பவா் தனது மனைவியுடன் கன்னியாகுமரி ரயிலில் சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா். பாலக்கரை அருகே ரயிலில் ஏறிய ஒருவா், இவரது மடிக்கணினியைத் திருடிக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பினாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த திருவருட்செல்வன், ரயிலின் அவசர சங்கிலியைப் பிடித்து இழுத்து கீழே குதித்து, திருடியவரைப் பிடிக்க ஓடினாா். தொடா்ந்து, இருப்புப்பாதை போலீஸாருக்கும் தகவல் அளித்தாா்.
தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸாா், ரயில் பாதையில் பதுங்கியிருந்த கோரிமேடு கூனிபஜாரைச் சோ்ந்த ப. காா்த்திக் (26) என்பவரை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

