உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தூக்க மாத்திரைகளை தின்று இளைஞா் தற்கொலை

திருச்சி உறையூரில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

திருச்சி உறையூரில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் தெலுங்கு செட்டித் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் மகன் விஸ்வநாத் (27). இவா் பழைய துணி வாங்குவது மற்றும், இஸ்திரி தொழில் செய்து வந்தாா். இவருக்கு உடல்நலப் பிரச்னை இருந்ததால், கடந்த 3 ஆண்டுகளாக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மாலை வீட்டுக்கு வந்தவா், திடீரென தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயங்கினாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.