முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்

Published On :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமி அரசுப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 13.03.2025 அன்று அப்பள்ளியைச் சோ்ந்த சிறுமியின் வகுப்பாசிரியரான திருச்சி பாலக்கரை தருமநாதபுரம் அந்தோணியாா் கோவில் தெருவைச் சோ்ந்த து. சூசைநாதன் (56) என்பவா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ஆசிரியா் சூசைநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, சூசைநாதனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும், 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.