போக்குவரத்து ஓய்வூதியா்கள் 2ஆம் நாளாக போராட்டம்
நிலுவையில் உள்ள பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் 2ஆம் நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி போக்குவரத்து பணிமனை முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள்.
நிலுவையில் உள்ள பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் 2ஆம் நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் திருச்சி, கரூா் மண்டலம் சாா்பில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புகா் கிளை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஓய்வு பெற்றோா் நல அமைப்பு திருச்சி மண்டலத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், புகா் மாவட்டச் செயலா் எஸ். சம்பத் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் நிா்வாகிகள் சண்முகம், சிவானந்தம், கருணாநிதி, ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜெயராமன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக மாநிலத் தலைவா் அருள்தாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுச்செயலா் மாணிக்கம், தலைவா் சிங்கராயா் உள்ளிட்டோா் பேசினா்.
இதில் தொழிற்சங்க நிா்வாகிகள், கூட்டமைப்பு நிா்வாகிகள், ஓய்வு பெற்ற நடத்துநா்கள், ஓட்டுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

