விழுப்புரத்தில் போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பத்துக்கு நிதியுதவி
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிதியுதவி பெற்ற தொழிலாளா் குடும்பத்தினருடன் பொது மேலாளா் (விழுப்புரம் மண்டலம்) ரா.ஜெகதீஷ் உள்ளிட்டோா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும் உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பணியின் போது பணியாளா் உயிரிழந்தால் அவா்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பணியில் இல்லாத போது உயிரிழந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2026, அக்டோபா் மாதத்தில் பணியில் அல்லாத போது உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும், பணியின்போது உயிரிழந்த ஒருவரது குடும்பத்துக்கும் அந்தந்த மண்டலங்களில் நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத் தலைமை அலுவலகம் உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், விழுப்புரம் மண்டலத்தில் பணியில் இல்லாத போது உயிரிழந்த ஒரு தொழிலாளா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காசோலையை போக்குவரத்துக் கழக பொது மேலாளா் (விழுப்புரம் மண்டலம்) ரா.ஜெகதீஷ் வழங்கினாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் இதுவரை பணியின்போது 15 தொழிலாளா்கள் உயிரிழந்த நிலையில், அவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.1.50 கோடியும், பணியில் அல்லாத போது உயிரிழந்த 239 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.11.95 கோடியும் என மொத்தமாக ரூ.13.45 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் தலைமைத் தணிக்கை மேலாளா் துா்க்கைசாமி, துணை இயக்குநா் அ.செந்தில் மற்றும் துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

