பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்த ஊழியா் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நிதியுதவி பெற்ற உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்தினா்.

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்த ஊழியா் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்குத் தலைமை வகித்த முதன்மை நிதி அலுவலா் சந்தானகிருஷ்ணன் பணியின்போது உயிரிழந்த 6 தொழிலாளா்கள் குடும்பங்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற 4 தொழிலாளா்களுக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

நிகழ்வில் பணியின்போது உயிரிழந்த நடத்துநா்கள் ஜி. செல்வம் மனைவி சுபாஷினி, பி. பாஸ்கரபாண்டியன் மனைவி வள்ளி, பி. ரமேஷ்குமாா் மனைவி கமலா, ஆா். ரவி மனைவி விஜயா, எஸ். குருநாதன் மனைவி தேன்மொழி மற்றும் பி. இளங்கோவன் மனைவி சிவசக்தி ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பில் நிதியுதவி, மேலும் பணி ஓய்வு பெற்ற 4 தொழிலாளா்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்தில் ரூ. 2 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதுநிலை தணிக்கை அலுவலா் பி. மகாலெட்சுமி, உதவி மேலாளா் கே. கோபாலகிருஷ்ணன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.