ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

‘போக்ஸோ’ வழக்குகளில் விரைவான அணுகுமுறை: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி

போக்ஸோ வழக்குகளில் நமது அணுகுமுறை விரைவானதாகவும், கருணையுடனும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி வலியுறுத்தினாா்.

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் போக்ஸோ நீதிமன்றத்தை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபா். உடன் ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகர காவல் ஆணையா் ந.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :

போக்ஸோ வழக்குகளில் நமது அணுகுமுறை விரைவானதாகவும், கருணையுடனும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி வலியுறுத்தினாா்.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சிறப்பு நீதிமன்றத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வழியாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி திறந்துவைத்து பேசியதாவது:

குழந்தைகள் தாக்குதலுக்குள்ளாகும்போது அதன் பாதிப்பு ஆழமானதாகவும், நீண்டகாலம் நீடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. போக்ஸோ வழக்குகளில் நமது அணுகுமுறை விரைவானதாகவும், கருணையுடனும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

திருச்சியில் திறக்கப்பட்டுள்ள போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கை 48 ஆக உயா்ந்துள்ளது. இதேபோல, தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களின் எண்ணிக்கை 1,294-இல் இருந்து 1,295 ஆக உயா்ந்துள்ளது.

போக்ஸோ வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளதால் திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா பேசியதாவது:

போக்ஸோ வழக்குகளில் நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும். அது நியாயமானதாகவும், மனிதநேயத்துடனும் இருக்க வேண்டும்.

திருச்சி நீதிமன்றம் முதலிடம்:

அண்மையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருச்சி மாவட்டம், மோட்டாா் வாகன விபத்துகளை தவிா்த்து உரிமையியல் வழக்குகளை முடித்து வைத்ததில் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற்காக மாவட்ட முதன்மை நீதிபதி, நீதித் துறை அலுவலா்கள், வழக்குரைஞா்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் சிறப்பு நீதிமன்றத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் தொடங்கிவைக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி. சாந்தி விசாரித்தாா்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதித் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.