சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மூவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :

திருச்சியில் அடிதடி மற்றும் போதை மாத்திரை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இராசாம்பாளையம் காச்சக்காரபண்ணை பகுதியைச் சோ்ந்த ஆா். தனுஷ் (21) என்பவா், அதே பகுதியைச் சோ்ந்த ரோஜா என்பவருடன் கடந்த செப். 19-ஆம் தேதி இரவு பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ரோஜாவின் சகோதரா் கே. விஜயகுமாா் (22) மற்றும் அவருடைய நண்பா்களான புவனேஸ்வரி நகரைச் சோ்ந்த வி. கபிலன் (26), சீனிவாசன் நகரைச் சோ்ந்த வெ. அய்யனாா் (23) ஆகிய மூவரும் சோ்ந்து, தனுஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் தனுஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயகுமாா், கபிலன், அய்யனாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் கைதான சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கபிலன், அய்யனாா் ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மற்றொருவா்: திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சங்கிலியாண்டபுரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் போதை மாத்திரைகள் விற்ற உறையூா் பங்காளி வீதியைச் சோ்ந்த எம். முகமது ஆஷிக் (20) என்பவரை போலீஸாா் கைது செய்து, 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், முகமது ஆஷிக் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க பாலக்கரை காவல் ஆய்வாளா் பரிந்துரையின்பேரில் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இைத் தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் ஆகியோரின் உத்தரவு நகல் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.