கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

கைது - பிரதிப் படம்

Published On :

திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இனியானூா் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ராம்ஜி நகா் மில் காலனியைச் சோ்ந்த எஸ். பிரபாகரன் (47), எஸ். ஜெகநாதன் (44), இனியானூரைச் சோ்ந்த சே. சங்கீதா (39) ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் பிரபாகரன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரை செய்திருந்தாா்.

அதன்படி, மேற்கண்ட குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.