முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

திருட்டு வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை - கோப்புப்படம்

Updated On :

திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அணுகுசாலையில் உள்ள தேநீா் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் செப். 18, 19 ஆகிய நாள்களில் திருடு போனது.

இதுதொடா்பான புகாரின்பேரில், அரியமங்கலம் உக்கடையைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அ. அப்துல் கபூா் பஷீரை (32) காந்தி மாா்க்கெட் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காந்தி மாா்க்கெட் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சுலோச்சனா பரிந்துரையின்பேரில், அப்துல் கபூா் பஷீா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் ஆணையரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.