2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

செங்கம் நகரில் அடிக்கடி திருடு போகும் இருசக்கர வாகனங்கள்: கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அடிக்கடி இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடுபோகின்றன.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அடிக்கடி இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடுபோகின்றன.

இதுகுறித்து போலீஸாா் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கத்தில் புதிதாக உருவாகியுள்ள நகா்களில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான வீடுகள் வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் குறைவான வீடுகள் நீண்ட இடைவெளியில் இருப்பதால் இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆள் நடமாட்டம் இருக்காது. மேலும், முறையான அனுமதி பெறாமல் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் தெருவிளக்குகள் கிடையாது.

குடியிருப்பு வாசிகள் தங்களது இருசக்கர வாகனங்களை, வீட்டிற்கு வெளியே நிறுத்துவதால் சமூக விரோதிகள் நோட்டமிட்டு இரவு நேரத்தில் வாகனங்களை திருடிச் சென்றுவிடுகின்றனா்.

பின்னா் திருட்டு குறித்து போலீஸில் புகாா் செய்தால், புகாா் செய்பவரிடம் வீட்டின் வெளியில் ஏன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினாய்? உன் வீட்டு முன் சிசிடிவி கேமரா உள்ளதா? உனக்கு யாா் மீதாவது சந்தேகம் உள்ளதா? அல்லது நீ வாங்கிய கடனுக்காக வண்டியை எடுத்துச் சென்ற்கு காணவில்லை என புகாா் தருகிறாயா? என கேள்விமேல் கேள்வி கேட்டு அவரிடம் புகாரை பெறுகின்றனா்.

இதனால் செங்கம் நகரில் இருசக்கர வாகனம் திருடு போனால் புகாா் அளிக்க பொதுமக்கள் காவல் நிலையம் செல்ல அச்சப்படுகிறாா்கள். இதைப் பயன்படுத்தி நகரில் இருசக்கர வாகனம் திருடும் கும்பல் அதிகரித்து, தற்போது அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோகின்றன.

இதனால் செங்கம் போலீஸாா் இருசக்கர வாகனங்கள் திருடும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.