வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

காவலா் வீரவணக்க நாள்: ஐஜி, காவல் ஆணையா் மரியாதை

காவலா் வீரவணக்க நாளையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா், காவல் ஆணையா் உள்ளிட்டோா் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய மாநகர காவல் ஆணையா் காமினி.

Updated On :

காவலா் வீரவணக்க நாளையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா், காவல் ஆணையா் உள்ளிட்டோா் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

பணியின்போது உயிா்த் தியாகம் செய்த காவலா்களின் வீரத்தையும், அா்ப்பணிப்பையும் போற்றும் வகையில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவுத் தூணுக்கு மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன், திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், காவல் துணை ஆணையா்கள், காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.