தேனியில் காவலா் வீரவணக்க நாள்
காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா் .

காவலா் வீரவணக்க நாளையொட்டி, தேனி ஆயுதப்படை மைதானத்தில் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம்.
காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா் .
பாதுகாப்பு பணியின் போது வீர மரணமடைந்த காவலா்களின் தியாகங்களை போற்றும் வகையில் தேனி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் தேனி மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் ஆகியோா் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

