திருச்சி விமான நிலையத்தில் 200 பவுன் தங்க நகைகள் பறிமுதல்: 2 போ் கைது
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு 200 பவுன் தங்க நகைகளை கடத்தி வந்த பெண் உள்ளிட்ட இருவரை விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு 200 பவுன் தங்க நகைகளை கடத்தி வந்த பெண் உள்ளிட்ட இருவரை விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை இரவு ஏா் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் பெண் உள்ளிட்ட இரு பயணிகளைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா்கள் காதலா்கள் என்பதும், இருவரும் அவா்களின் உள்ளாடை மற்றும் கைப்பையில் மறைத்து 200 பவுன் தங்கச் சங்கிலிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2.26 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

