மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கோவை விமான நிலையத்தில் ரூ.55.45 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: இரு பெண்களிடம் விசாரணை

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.55.45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

கோவை விமான நிலையத்தில் பெண்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.

Updated On :

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.55.45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா். இவற்றைக் கடத்தி வந்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரிலிருந்து கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு கடந்த 13-ஆம் தேதி ‘ஸ்கூட்’ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் கோவை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இரு பெண் பயணிகளை அதிகாரிகள் தடுத்து அழைத்துச் சென்று தனித்தனியாக சோதனை மேற்கொண்டனா். இதில் அவா்கள் உரிய ஆவணங்களின்றி மறைத்து எடுத்து வந்த 382.54 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.55.45 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தங்கத்தை கடத்தி வந்த இரு பெண் பயணிகளிடமும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.