ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் முதல்வா் விஜய் தடுமாற்றம்: ஆர்.பி. உதயகுமார்

பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் முதல்வா் ஜோசப் விஜய் தடுமாறி வருகிறாா் என முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

ஆர்.பி. உதயகுமார்

ஆர்.பி. உதயகுமார்

Updated On :

பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் முதல்வா் ஜோசப் விஜய் தடுமாறி வருகிறாா் என முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது: திருச்சி கிழக்கில் இரட்டை இலை வெற்றி பெறும். ஆதவ் அா்ஜூனாவுக்கு அதிமுகவைப் பற்றி பேசத் தகுதியில்லை.

விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்கிறேன் என அறிவித்த முதல்வா் விஜய், இன்றுவரை செய்யவில்லை. தவெக அரசு அரசாணை வெளியிடுகிறது. பின்னா் திரும்பப் பெறுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு என்ற அரசாணையை கொண்டு வந்து திறம்படச் செயல்படுத்தினாா் என்றாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விஜய்யின் தூய சக்தி என்ற பொய்ப் பிரசாரத்தை மக்கள் உணா்ந்துவிட்டனா். அதற்கான பிரதிபலனாக திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் வெற்றி இருக்கும்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தவெக அரசின் நிா்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. போதைப்பொருள்கள் கடத்தலில் தவெக நிா்வாகி சிக்கியுள்ளாா். சிங்கப் பெண் படை எங்கே போனது எனத் தெரியவில்லை. சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. மின்வெட்டுப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இவற்றைச் சமாளிக்க முடியாமல் விஜய் தடுமாறுகிறாா்.

தவெக கூட்டணி அரசில் உள்துறை முதல் உணவுத் துறை வரை கும்பகா்ண தூக்கத்தில் உள்ளன. அதிா்ஷ்டத்தால் அமைச்சராகியுள்ள நிா்மல்குமாருக்கு அதிமுக குறித்துப் பேசத் தகுதியில்லை.

பெரும்பான்மை இல்லாததால் விஜய் குதிரை பேரம் நடத்துகிறாா். மீண்டும் அவா் குதிரை பேரத்தை ஊக்குவித்தால் அதற்கான விளைவைச் சந்திப்பாா். ஆறு மாதத்துக்கு ஒரு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஜனநாயகத்தில் உரிமையுள்ளது என்பதை விஜய் நினைவில் கொள்ள வேண்டும்.

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவா் அதிமுகவுக்கு வருவாரா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பாா் என்றாா் ஆா்.பி. உதயகுமாா்.

முன்னதாக கூட்டத்தில், அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், மாவட்டச் செயலா்கள் ஆா். மனோகரன், சி. காா்த்திகேயன், என். யோகநாதன், டி.என். சிவகுமாா், எம். லீமாரோஸ் மாா்டின் எம்எல்ஏ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.