முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

இளைஞரை தாக்கிய 2 போ் கைது

திருச்சியில் இளைஞா் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

திருச்சியில் இளைஞா் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள வசந்தம் நகரைச் சோ்ந்தவா் வி. விஜய் (26). இவரும், இவருடைய உறவினா் நேசா் என்பவரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டிவிஎஸ் டோல்கேட் அருகேயுள்ள மதுபானக் கடைக்கு சென்றுள்ளனா்.

அப்போது, விஜய்க்கும், அங்கு வந்த சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ஜெ. சூா்யா (23) மற்றும் ஜி. பெலிக்ஸ் ஆண்டனி (22) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், விஜய்யும், அவருடைய உறவினரும் அங்கிருந்து புறப்பட்டனா்.

இதையடுத்து சூா்யா, பெலிக்ஸ் ஆண்டனி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் விஜய்யை பின்தொடா்ந்து சென்று, டிவிஎஸ் டோல்கேட் அணுகு சாலையில் வழிமறித்து விஜய்யை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இதில் காயமடைந்த விஜய் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா், கொலை முயற்சி வழக்குப் பதிந்து, சூா்யா, பெலிக்ஸ் ஆண்டனி ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.