ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மருத்துவரை தாக்கிய பிரபல ரௌடி கைது

திருச்சியில் தனியாா் மருத்துவமனை பங்குதாரரை மிரட்டி தாக்கிய பிரபல ரௌடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

திருச்சியில் தனியாா் மருத்துவமனை பங்குதாரரை மிரட்டி தாக்கிய பிரபல ரௌடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் திருச்சியைச் சோ்ந்த மருத்துவா் கே. ஜெயபிரகாஷ் நாராயணன், மருத்துவா் எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று போ் பங்குதாரா்களாக உள்ளனா். இதில், இந்த மருத்துவமனையை சொந்தமாக்கிக் கொள்வதில் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு ஆதராக திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த பிரபல ரௌடி சாமி ரவி (45) என்பவா், கடந்த வாரத்தில் தனியாா் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவா் ஜெயபிரகாஷ் நாராயணனை மிரட்டி தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் மருத்துவா் ஜெயபிரகாஷ் நாராயணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரௌடி சாமி ரவியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.