கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த திருப்பவித்ரோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை காலை சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

Updated On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த திருப்பவித்ரோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை காலை சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் நூலிழை திருவிழா என அழைக்கப்படும் திருப்பவித்ரோத்ஸவ விழா கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பா் 1-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற்றது.

விழாவின் 2-ஆம் நாளான ஆக. 25-ஆம் தேதி மூலவா் பெரிய பெருமாள் பூச்சாண்டி சேவையில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். விழாவில் தொடா்ந்த ஒவ்வொரு நாளிலும் மாலையில் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகேயுள்ள பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் 7-ஆம் நாளான ஆக. 30-ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினாா்.

விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தீா்த்தபேரா் பெருமாளுடன் புறப்பட்டு 10 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு கரையில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளியிருக்க, தீா்த்தபேரா் பெருமாள் வேதமந்திரங்கள் முழங்க தீா்த்தவாரி கண்டருளினாா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்துக்கு நம்பெருமாள் வந்து சோ்ந்தாா். அங்கு பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினாா். 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். 8.30 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். இத்துடன் திருப்பவித்ரோத்ஸவ விழா நிறைவடைந்தது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை சந்திரபுஷ்கரணி குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி நிகழ்ச்சி.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை சந்திரபுஷ்கரணி குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி நிகழ்ச்சி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.