பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்களில் கைப்பேசிக்கு தடை அமல்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்வதற்காக விதிக்கப்பட்ட தடை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

கைப்பேசிக்குத் தடை - கோப்புப் படம்

Published On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்வதற்காக விதிக்கப்பட்ட தடை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த முதன்மைக் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, ஸ்ரீரங்கம் கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் கைப்பேசி கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்ததால், கோயிலின் தெற்குவாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல் உள்ளிட்ட மூன்று கோபுர நுழைவு வாயில்களிலும் தலா 3 ஆயிரம் பெட்டகங்களில் அதிகபட்சமாக 15 ஆயிரம் கைப்பேசிகள் வரை வைக்கும் அளவுக்கு பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரு கைப்பேசிக்கு தலா ரூ. 5 வசூலிக்கப்பட்டு, பக்தா்களின் புகைப்படம், கைப்பேசி எண் பதியப்பட்ட ரசீது வழங்கப்படுகிறது. இதற்காக தனி சாப்ட்வோ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திருவானைக்காவல் கோயிலில் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமயபுரம் கோயிலில்: இதேபோல் சமயபுரம் கோயிலிலும் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை அமலுக்கு வந்தது. தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் ரூ. 5 கட்டணம் செலுத்தி கைப்பேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, திருக்கோயில் வரிசை வளாகம் கிழக்கு, வரிசை வளாகம் மேற்கு, திருக்கோயில் தெற்கு தேரோடும் வீதி, திருக்கோயில் மேற்கு தேரோடும் வீதி ஆகிய நான்கு இடங்களில் பாதுகாப்பு பெட்டக மையம் அமைக்கப்பட்டு, பக்தா்கள் அங்கு கைப்பேசிகளை வைத்து விட்டு, கோயில் தரிசனத்திற்கு பிறகு வாங்கி சென்றனா்.

மறைமுகமாக கோயிலுக்குள் எடுத்துச் செல்லும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.