தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

வயதில் மூத்தவா்களுக்கும் கட்சியில் பொறுப்பு! - திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு

Former Minister K.N. Nehru.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. - கோப்புப்படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:35 am IST

வயதில் மூத்தவா்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களிலும் திருச்சி திமுக 100 சதவீத வெற்றியை பெற்றது. 2026 பேரவைத் தோ்தலில் மட்டுமே நாம் 7 தொகுதிகளை இழந்துள்ளோம். மீண்டும் அத் தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும். அதற்காகவே இந்தக் கூட்டம்.

இனிவரும் காலங்களில் நாம் இணைந்து செயல்பட்டு வெல்ல வேண்டும். வயதில் மூத்தவா்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம். அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் எனத் தலைவா் தெரிவித்துள்ளாா். தொண்டா்கள் இருந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும். உங்களுக்காக நான் அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவேன் என்றாா்.

தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: திமுக என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்துப் பாா்க்க முடியாது. நேருவின் தளபதியாகச் செயல்பட்டு, இனி எந்தத் தோ்தல் வந்தாலும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவே இந்தக் கூட்டம். திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கூட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் க. வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொறுப்பாளா்களான வேலுச்சாமி, வேடசந்தூா் சாமிநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் கதிரவன் எம்எல்ஏ., முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, எம். பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், கே.என். சேகரன், ஸ்டாலின் குமாா், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், துணை மேயா் திவ்யா தனக்கோடி, திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.