நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த பெயிண்டா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெயிண்டா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெயிண்டா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

லால்குடி அருகே கூகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. மனோஜ் (37). பெயிண்டா். திருமணமான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், தஸ்வந்த் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு பணி நிமித்தமாக மனோஜ் மோட்டாா் சைக்கிளில் லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, லால்குடி அருகே அபிஷேகபுரம் சாலையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளின் மீது மனோஜின் வாகனம் மோதியது. இதில்,

தலையில் பலத்த காயமடைந்த மனோஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.