
பிஷப் ஹீபா் கல்லூரியில் ஊட்டச்சத்து வார நிறைவு விழா
திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெற்று வந்த ஊட்டச்சத்து வார விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊட்டச்சத்து வார நிறைவு விழாவில், போட்டியில் வென்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா் மருத்துவா் வித்யா லட்சுமி. உடன், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவா் சி. ரோஸ்லின் உள்ளிட்டோா்
திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெற்று வந்த ஊட்டச்சத்து வார விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில், ஹீபா் டயட்டெடிக் அசோசியேஷன் மற்றும் முதுகலை உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து வார விழா செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியாக செப்டம்பா் 1-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் கலைவாணன் கலந்துகொண்டு எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், சமச்சீா் ஊட்டச்சத்து, நோய்த் தடுப்பு, ஊட்டச்சத்து குறைபாடு தொடா்பான பிரச்னைகள், சமூக ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறையில் தொழில்முறை மேம்பாடு தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ஊட்டச்சத்து வார நிறைவு விழா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சிஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவா் வித்யாலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஊட்டச்சத்து வார விழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் முதுகலை உணவு மற்றும் ஊட்டச்சத்து துறைத் தலைவா் சி. ரோஸ்லின், உதவிப் பேராசிரியா் கௌரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







