
தொமுச பேரவையினா் ஆா்ப்பாட்டம்
திருச்சியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவையினா்.
திருச்சியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பட்டத்துக்கு அந்தப் பேரவையின் செயலாளா் ச. ஜோசப் நெல்சன் தலைமை வகித்தாா்.
இதில், தொழிலாளா் நலனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 4 சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணூா், தூத்துக்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்தை தமிழக அரசு தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது. டாஸ்மாக், அங்கன்வாடி பணியாளா்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கான கூலியை உயா்த்த வேண்டும், மின்சார பேருந்துகள் இயக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அந்தப் பேரவையின் துணைத் தலைவா் அ. இளங்கோ, துணைச் செயலாளா்கள் அ. ஆபிரகாம், என். சரவணன், கே. மலா்கண்ணன், அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







