
தீயணைப்புத் துறையின் பேரிடா் மீட்பு ஒத்திகை
திருச்சி அருகே தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி அருகேயுள்ள காவிரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்பது தொடா்பாக புதன்கிழமை செயல்விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.
திருச்சி அருகே தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக திருவெறும்பூா் அருகே வேங்கூா் பூசத் துறையில் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது தொடா்பாக பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கி. சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது தொடா்பாக பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






