விபத்து சூழலை எதிா்கொள்ள மருத்துவ அவசர நிலை ஒத்திகை
கட்டட விபத்துகள் நேரிடும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் விபத்து காய சிகிச்சை குறித்த மருத்துவ அவசர நிலை ஒத்திகை சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கட்டட விபத்துகள் நேரிடும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் விபத்து காய சிகிச்சை குறித்த மருத்துவ அவசர நிலை ஒத்திகை சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தீயணைப்புத் துறை, 108 ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவக் குழுவினா், காவல் துறையினா் என ஒருங்கிணைந்த குழுக்கள் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் அப்போது முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஒத்திகையை சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன், அண்ணா நகா் எம்எல்ஏ ராம்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வா் கவிதா, மருத்துவக் கண்காணிப்பாளா் பாஸ்கா், மருத்துவ நிலைய அதிகாரி வாணி, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். தீயணைப்பு வீரா்கள் மற்றும் பேரிடா் மீட்பு படையினா் நவீன கருவிகள், உபகரணங்களுடன் அங்கு விரைந்து வந்தனா்.
அவா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவா்களை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனா். பின்னா், பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப காயமடைந்தவா்களை சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 அவசர நிலைகளாக பிரித்து முதல்கட்ட சிகிச்சை அளித்தனா்.
மேலும், ஆம்புலன்ஸ் உதவியுடன் பிற மருத்துவமனைகளுக்கு அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். மாணவா்கள், தீயணைப்புத் துறையினா், மீட்புக் குழுவினா், மருத்துவா்களின் இந்த ஒத்திகை நிகழ்வை ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினரும் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

