மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு 320 முதுகலை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஜே.பி. நட்டா

ஹிமாச்சலப் பிரதேசத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளில் 320 புதிய முதுகலை மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கு அளித்துள்ள ஒப்புதல் குறித்து..

 Nadda

ஜெ.பி. நட்டா - கோப்புப் படம்

Updated On :

புது தில்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளில் 320 புதிய முதுகலை மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கு, சுமார் ரூ.415 கோடி மானியத்துடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பான ஒரு அறிக்கையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச அரசிடமிருந்து ஒரு பரிந்துரை கடிதம் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி பிலாஸ்பூர் எய்ம்ஸ் வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, என்னோடு இதுகுறித்து ஆலோசனை நடத்தியதற்கு பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, கடந்த 12 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறையில் பல புரட்சிகரமான முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கூடுதல் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்களின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,000 கோடி செலவில் 10,000 புதிய மருத்துவ இடங்களை உருவாக்கும் மத்திய அரசின் இலக்கின் ஒரு பகுதியாக, 320 முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான பரிந்துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.415 கோடி மானியம் வழங்கவுள்ளது என்று நட்டா கூறினார்.

இதையடுத்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மொத்த முதுகலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 277 இல் இருந்து 597 ஆக உயரும்.

அதன்படி, அதிகபட்சமாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, சிம்லா 91 இடங்களும், அதைத் தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவக் கல்லூரி, ஹமீர்பூர் 57 இடங்கள், டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரி, டாண்டா 57 இடங்கள், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி மருத்துவக் கல்லூரி, மண்டி 55 இடங்கள், டாக்டர் ஒய்.எஸ். பார்மர் அரசு மருத்துவக் கல்லூரி, நஹான் 32 இடங்கள் மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி, சம்பா 28 இடங்களைப் பெறும்.

மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்ட 320 இடங்கள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து முடித்து, மாணவர்கள் விரைவில் பயன்பெறுவதற்கான வழிவகையினை ஹிமாச்சலப் பிரதேச அரசு செய்திட வேண்டும் என நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

மருத்துவப் பட்டதாரிகள் மாநிலத்திற்குள்ளேயே சிறப்புப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதுநிலை மருத்துவக் கல்வியை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிறப்பு மருத்துவர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதோடு, மேம்பட்ட சுகாதார சேவைகள் கிடைப்பதை ஆதரிக்கவும் உதவும். குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளில் சிறப்பு சிகிச்சையை அணுகுவது சவாலாக இருக்கும் ஒரு மலைப்பிரேச மாநிலத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாநிலத்தின் முதுகலை மருத்துவக் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஆறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான மத்திய அரசின் மானியம், அங்கீகரிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Union Minister of Health and Family Welfare JP Nadda on Saturday announced that the Central government has approved a proposal to add 320 postgraduate (PG) medical seats in Himachal Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.