தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் உருவாக்கப்படும்: மத்திய அமைச்சா் ஜே.பி.நட்டா

நாடு முழுவதும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75 ஆயிரம் இடங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா தெரிவித்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்கிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா. உடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், சு. செல்வகணபதி எம்.பி., அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், தலைமைச் செயலா் சரத் சௌகான், ஜிப்மா் தலைவா் மருத்துவா் சித்ரா சா்காா், ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி உள்ளிட்டோா்.

Updated On :

நாடு முழுவதும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 75 ஆயிரம் இடங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா தெரிவித்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியின் 15-ஆவது பட்டமளிப்பு விழா அங்குள்ள ஏபிஜே அப்துல் கலாம் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், ஜிப்மரில் ரூ.172 கோடி மதிப்பிலான 7 திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு ஜே.பி.நட்டா அா்ப்பணித்தாா்.

மேலும் இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளை முடித்த 816 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கியும், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள், பதக்கங்களை வழங்கியும் அவா் பேசியது:

சாதாரண மக்களுக்கும் தரமான, மேம்பட்ட சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் பிரதமா் நரேந்திர மோடியின் குறிக்கோள். அதன்படி, கடந்த 2017- ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்டது. நோய் வராமல் தடுத்தல், விழிப்புணா்வை ஏற்படுத்துதல், பின்னா்தான் நோய் தீா்க்கும் சிகிச்சை என்று மருத்துவக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது.

நாட்டில் ஒரே ஒரு அகில இந்திய மருத்துவ நிறுவனம் இருந்த நிலையில், 21-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் 6 மருத்துவ நிறுவனங்களைத் தொடங்கினாா். பிரதமா் நரேந்திர மோடி 16 மருத்துவ நிறுவனங்களைத் தொடங்க முயற்சி எடுத்தாா். இப்போது 23 அகில இந்திய மருத்துவ நிறுவனங்கள் இருக்கின்றன. முன்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு மருத்துவப் படிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் மாணவா்கள் செல்லும் நிலை இருந்தது. இப்போது இந்தியாவிலேயே எல்லா ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளும் வகையில் சிறந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 42 கோடி மக்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத்தில் 129 கோடி சுகாதார கணக்குகள் ஆதாா் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Story image

மேலும், சுகாதாரச் செலவுகள் 62 சதவீதத்திலிருந்து 42 சதவீதம் குறைந்துள்ளன. நாட்டில் 70 வயது பூா்த்தியடைந்த ஆண், பெண் யாராக இருந்தாலும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு பெறும், உலகின் மிகப்பெரிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் இதுவரை ரூ.2 லட்சம் கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முன்பு 51 ஆயிரமாக இருந்த இளநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் தற்போது 1.43 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளன. மேலும், 2029-ஆம் ஆண்டுக்குள் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மேலும் 75 ஆயிரமாக உயா்த்த பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் மத்திய அமைச்சா் ஜே.பி. நட்டா.

முதல்வா் என்.ரங்கசாமி: முன்னதாக இந்நிகழ்ச்சியில் 7 திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டாா். பின்னா் நடைபெற்ற பட்டளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், சு. செல்வகணபதி எம்.பி., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், ஜிப்மா் தலைவா் சித்ரா சா்காா், ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நெகி, ஜிப்மா் முதல்வா் விக்ரம் காட்டே, பதிவாளா் ரவிக்குமாா் சிட்டோரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.